பி இ ஜி விகிதம்


பி இ ஜி விகிதம்
பி இ ஜி விகிதம் 

இந்த கணக்கு ஒரு கணிப்பான கணக்கு, அதனால் முதலீடு ரிஸ்க் கண்டிப்பாக அதிகம் ஆக இருக்கும். அதாவது நீங்கள் ஒரு கணக்கு போட்டு வைத்து இருப்பீர்கள். அந்த கணக்கு படி நீங்கள் பங்கு வாங்குவீர்கள். உங்கள் கணக்கையும் தாண்டி கம்பெனியின் பங்குகள் சரி வர விலை ஏறவில்லை என்றால், உங்களுக்கு பெரும் நஷ்டம். உங்கள் கணிப்பு படி கம்பெனி விலை ஏறினால், உங்களுக்கு அதிகப்படியான லாபம்.

எதிர்காலத்தில் ஒரு கம்பெனி நன்றாக செயல்பட்டு அதன் EPS வருமானம் அதிமாகும் என்று ஒரு கணிப்பு வைத்து இருக்குறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.இப்பொழுது அதிகரித்த EPS அளவோடு கம்பெனியின் பி இ விகிதத்தை ஒப்பிட்டு , பி இ விகிதம் குறைவாக இருக்கும் பட்சத்தில், அந்த பங்கை வாங்கினால் லாபம் கிடைக்கும் வாய்ப்பு மிக அதிகம்.

பி இ ஜி விகிதம் = பி இ விகிதம் / இ பி எஸ் வளர்ச்சி விகிதம் 

மேற்சொன்ன பார்மூலா வைத்து கணக்கீடும் பொழுது பி இ ஜி விகிதம் 1 ஐ  விடக் குறைவாக இருந்தால் , கம்பெனி நல்ல கம்பெனிதான். ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக கம்பெனி விலை ஏறவில்லை , ஆனால் கண்டிப்பாக ஏறும்.எனவே பங்குகளை வாங்கி போடலாம்.

மேற்சொன்ன பார்மூலா வைத்து கணக்கீடும் பொழுது பி இ ஜி விகிதம் 1 ஐ  விட அதிகமாக இருந்தால் பங்கின் விலை அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம். முத்தீடு செய்வது சற்று ரிஸ்க் ஆனது.

பி இ ஜி விகிதம் 1 ஆக இருந்தால் பங்கின் விலை சரியான விலையில் இருக்கிறது என்று அர்த்தம். நீங்கள் முதலீடு செய்யலாம். இதுவரை நாம் பார்த்தது எல்லாம் ஓரளவு கணிப்பு தருபவை. ஆனால் சரியான கணிப்பு பெற பண்டமென்டல் அனாலிசிஸ் (Fundamental Analysis) தெரிந்து கொள்வது அவசியம்.




Comments

Popular posts from this blog

சப்போர்ட் லெவெல்

போனஸ் மற்றும் போனஸ் ரேஷியோ

பேஸ் வேலுயு - முக மதிப்பு