கிரெடிட் கார்டு கடன் மீளும் வழி
![]() |
| கிரெடிட் கார்டு கடன் மீளும் வழி |
உங்கள் வருமானத்தின் பலம் உங்களுக்குத் தெரியும். அதனால் நீங்கள் வாங்கிய பொருட்களுக்கான தொகையைக் கண்டிப்பாக செலுத்த முடியுமா அல்லது முடியாதா? என்று உங்களுக்குத் தெளிவாக தெரியும். இது போன்ற சமயத்தில் புத்திசாலித்தனமாக முடிவெடுங்கள்.
ஏதோ ஒரு வழியில் உங்கள் கிரெடிட் கார்டு கடன் அதிகமாகி விட்டது என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அந்தக் கடனைத் திரும்ப அடைக்க முடியாமல் தடுமாறுகிறீர்கள் என்றால், கடன் தந்த நிறுவனத்திடம் சற்று அமைதியாக பேசி பர்சனல் லோனாக மாற்றிக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
இதன் மூலமாக உங்கள் வட்டி குறையும். அதாவது, கிரெடிட் கார்டு கடனுக்கு 36% வட்டி எனில், பர்சனல் லோனுக்கு 13% முதல் 20% வரை வட்டி விதிக்க வாய்ப்புண்டு. எனவே உங்கள் வட்டிச் சுமை குறைவதுடன், திரும்பச் செலுத்தவேண்டிய தொகையை மாதத் தவணையாகவும்(இஎம்ஐ) மாற்றி தருவார்கள்.
சில நேரங்களில் உங்களுக்கு ஏதோ ஒரு வழியில் பணம் அதிகமாக வந்தால் மொத்த கடனையும் கட்டிவிட நினைக்கும் பொழுது, ஒரு குறிப்பிட்ட தொகையை அபராதமாக நிறுவனங்கள் வசூலிக்கும். இந்த தொகை எவ்வளவு என்பதையும் முன் கூட்டியே விசாரித்துக் கொள்வது நல்லது.

Comments
Post a Comment